யாழில் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் ஈடுபட்ட ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி
ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) கடந்த திங்கட்கிழமை (04) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்ததுடன் நேற்று (05) பல்வேறுபட்ட சந்திப்புகளில் ஈடுபட்டார்.
ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதிக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரனுக்கும் இடையிலான யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பான விரிவான கலந்துரையாடல் நேற்று (05) காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழகத்திற்கு விஜயம்
இதன்பின்னர் ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதேவேளை யாழ்ப்பாணக் கோட்டைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அங்கிருந்து யாழ் நகரத்தின் அழகை பார்வையிட்டார்.


