புதுடில்லியில் தலைவர் பிரபாகரனுக்கு நடந்தது என்ன..!
இந்தியா மீது குறிப்பாக இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீது விடுதலைப் புலிகளை பகைகொள்ள வைத்த முக்கியமான இரண்டு சம்பவங்கள் பற்றி தற்பொழுது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டில் வைத்து கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை கடந்த நிகழ்ச்சியில் விரிவாக பார்த்திருந்தோம்.
தமிழ்நாட்டில் வைத்து தலைவர் பிரபாகரனுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலே இனி தங்கி இருப்பது உசிதம் அல்ல என்று கூறி, தமிழீழத்திற்குச் சென்று அங்கிருந்தபடி போராடிக் கொண்டிருந்த பிரபாகரன், இந்தியாவின் அழைப்பின் பேரில் புதுடில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டது பற்றியும் பார்த்திருந்தோம்.
புதுடில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்றும், அவர் புதுடில்லியில் எதிர்கொண்ட சவால்கள் பற்றியும் தான் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் சுருக்கமாக நாம் பார்க்க இருக்கின்றோம்,
முன்னைய பதிவுகள்
