யாழில் இளம் ஊடகவியலாளர் கொரோனாவால் மரணம்
யாழ். கொடிகாமத்தைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது - 26) இன்று கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கடந்த 5 நாட்களாக தலைவலி, இருமல், காய்ச்சல் என்பவற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, கொரோனா தொற்றுள்ளதாக நேற்று முன்னெடுக்கப்பட்ட அண்டிகன் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டது .
இந்த நிலையில் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் .
ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் முகநூல் ஊடாக பலரையும் ஒருங்கிணைத்து அநீதிக்கு எதிரான போராட்டங்களை நடத்தியவர் என்பதுடன், இதனை பாராட்டி மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்தமாக சமூக ஊடகங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு செயற்பாடு விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவர் ஒரு சமூக ஊடகப் போராளி என்பதுடன் சுயாதீன ஊடகவியலாளராக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், செய்திகள் எழுதி வந்துள்ளதுடன், உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களுக்கும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
