கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகும் தொகை அதிகரிப்பு
By Shalini
திருகோணமலை மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளது.
இதுவரை 52 கர்ப்பிணிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 19 ஆண்கள், 12 பெண்கள் அடங்கலாக 31 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் நால்வர் மரணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் மொத்த மரண எண்ணிக்கை 91ஆக அதிகரித்துள்ளதாகவும் அப்பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் நேற்று (02) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்