எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பான வரைபு தயார்
price
fuel
Udaya Gammanpila
Prepare
formula
By Vanan
எரிபொருள் விலை சூத்திரம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
குறித்த எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பான வரைபினை எதிர்வரும் 21 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் கடந்த டிசம்பர் மாதம், 74 டொலராக காணப்பட்ட மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, தற்போது 94 டொலர் வரையில் அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில், கனியவள கூட்டுத்தாபனம் நிதி அமைச்சிடம் கோரியுள்ளது.
எனினும், இது குறித்து தற்போதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
