ஜனாதிபதி அநுர - பிரதமர் மோடி முக்கிய பேச்சு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) மற்றும் இந்திய(india) பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) இருவரும் தற்போது இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் (HC) தெரிவித்துள்ளது.
இலங்கையில்(sri lanka) ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக இடம்பெற்ற வரவேற்பு
இந்த விஜயம் டிசம்பர் 15 முதல் 17 வரை நீடிக்கும். அதன்படி, இன்று (16) முன்னதாக புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திசாநாயக்கவை பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு (Draupadi Murmu) ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.
முன்னதாக நேற்று(15)தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க தலைநகர் டெல்லியை சென்றடைந்த நிலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் ஆகியோருடன் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |