நாட்டிற்கு நகைச்சுவையாக மாறியுள்ள அரசதலைவரும் அமைச்சரவையும் - எதிர்க்கட்சி கிண்டல்
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை அமைச்சர் ஒருவர் பாதுகாக்கத் தவறினால், அவ்வாறான அமைச்சர்களை நீக்குவது அமைச்சரவையின் தலைவரான அரசதலைவரின் பொறுப்பாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்(Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
எனினும், அரசதலைவர் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர, அத்தகைய அமைச்சர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
மறுபுறம் அமைச்சர்களான விமல் வீரவன்ச(Wimal Weerawansa), உதய கம்மன்பில(Udaya Gammanpila), வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara) போன்றவர்களும் ஊடகங்களுக்கு பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றார்கள் ஆனால் முதுகை நிமிர்த்தி பதவியில் இருந்து இறங்கமாட்டார்கள் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
யுகதனவி உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவை உறுப்பினர்களுக்கு அறிவிக்காமல் அரசதலைவர் தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்திருந்தால், அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து எதிர்ப்பு தெரிவிப்பதே இலகுவான விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.
கடைசியில் இதுவும் மக்களுக்கு ஜோக்குகளை வழங்கும் ஜாலியான சீசன் போல நகைச்சுவையாக மாறி, இப்போதுதான் இன்னொரு பயாஸ்கோப்பாக மாறிவிட்டது என்கிறார் அவர்.
மக்கள் பல பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும் அரசதலைவரும் அமைச்சரவையும் முழு நாட்டிற்கும் நகைச்சுவையாக செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.