காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: ஜனாதிபதி அநுர கடும் கண்டனம்
இந்தியாவில் காஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கண்டனம் வெளியிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுர எக்ஸ் (X) பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரவின் பதிவு
அதில், “இந்தியாவில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எங்கள் இதயங்கள் உள்ளன.
I condemn in the strongest terms the cowardly terrorist attack in India. Our hearts are with the victims and their families. Sri Lanka always stands in solidarity with the people of India.
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) April 23, 2025
இலங்கை எப்போதும் இந்திய மக்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது.” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச தலைவர்கள் கண்டனம்
காஷ்மீரில் நேற்றையதினம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொலை செய்யபட்டதோடு, சுமார் 40 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளார்.
இதற்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதக் குழுவின் நிழல் குழுவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த பயங்கரவாத தாக்குதலுக்கும் அமெரிக்க ஜனாதிபதி உட்பட பல சர்வதேச தலைவர்களும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
