செம்மணி மனித புதைகுழியை பார்வையிடுவாரா ஜனாதிபதி...! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

Sri Lanka Army Jaffna Anura Kumara Dissanayaka chemmani mass graves jaffna
By Thulsi Sep 01, 2025 02:24 AM GMT
Report

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க அரியாலை சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிடுவாரா என்று எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் வலுத்துள்ளது.   

பல்வேறு அபிவிருத்தி பணிகளை தொடக்கி வைப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார இன்றைய தினம் (1.09.2025) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

தொடர்ச்சியாக குடும்பம் குடும்பமாக எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டு வரும் மக்களுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு மற்றும் புலம் பெயர் நாடுகளில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் ஜனாதிபதி செம்மணி புதைகுழி பகுதிக்கு விஜயம் செய்வது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மகிழ்ச்சித் தகவல் - யாழ்ப்பாணத்தில் இன்று முதல் கடவுச்சீட்டு அலுவலகம்

மகிழ்ச்சித் தகவல் - யாழ்ப்பாணத்தில் இன்று முதல் கடவுச்சீட்டு அலுவலகம்

படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்கள்   

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியை பார்வையிடுவாரா ஜனாதிபதி...! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு | President Anura Visit Jaffna Chemmani Mass Grave

செம்மணியில் புதிதாக பத்து எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரையில் 191 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இதுவரையில் 209 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை தோண்டத் தோண்ட தினமும் விதவிதமான கொடூரங்கள் அங்கே அரங்கேறி காட்சி அளிக்கின்றன. யுத்தத்தில் ஈடுபடாத தரப்பினரும் இங்கே படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்கள் என்பது பல்வேறு வகையில் நிரூபணமாகிறது.

அதிலும் மழலைகளும், சிறுவர்களும் உள்ளடங்குகின்றார்கள் என்பது மனித குலம் மன்னிக்க முடியாத ஆகப்பெரிய கொடூரம்.

CID செல்லும் ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க

CID செல்லும் ரணிலின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க

இதுவரையில் அறியப்படுத்தப்படவில்லை

இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது அவர் செம்மணிக்கு வருகை தருவாரா? என்பது குறித்து நீதிமன்றுக்கு இதுவரையில் அறியப்படுத்தப்படவில்லை என பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழியை பார்வையிடுவாரா ஜனாதிபதி...! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு | President Anura Visit Jaffna Chemmani Mass Grave

மேலும் யாழ்ப்பாண விஜயத்தின் போது செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிடலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.

எனினும் தற்போது வரை வெளியான ஜனாதிபதியின் யாழ் விஜயம் குறித்த நிகழ்ச்சி நிரலில் செம்மணி விஜயம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொன்று புதைக்கப்பட்ட தமிழினம்: பிரித்தானியாவில் வெடித்த பாரிய போராட்டம்

கொன்று புதைக்கப்பட்ட தமிழினம்: பிரித்தானியாவில் வெடித்த பாரிய போராட்டம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010