ஐக்கிய அரபு இராச்சியத்தில் பல முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ள அநுர
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான (UAE) மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இரண்டாவது நாளான இன்று (11) பல முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
அந்தவகையில் இன்றைய தினம் "எதிர்கால அரசாங்கங்களின் வடிவம்" என்ற தொனிப்பொருளில் டுபாயில் (Dubai) நடைபெறும் 2025 உலக அரச மாநாட்டின் (World Government Summit) முழுமையான அமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
மேலும் மாநாட்டின் போது முக்கியமான சில இருதரப்பு சந்திப்புகளிலும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முக்கிய சந்திப்பு
அதன்படி அநுரகுமார திசாநாயக்க டவ் ஜோன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுடனும் பின்னர் கொலம்பியாவின் (Colombia) ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவுடனும் இருதரப்பு சந்திப்புக்கள் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பிரித்தானிய (UK) முன்னாள் பிரதமர் டொனி பிளேயாருடன் சந்திப்பொன்றில் கலந்துகொள்ளவிருப்பதுடன் பாகிஸ்தான் (Pakistan) பிரதமர் மொஹமட் ஷெபாஸ் ஷெரீப்புடனான இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்த கலந்துரையாடலிலும் கலந்துகொள்வார்.
வெளிநாட்டு விஜயம்
பின்னர் ஒரகல் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியுடனும் கலந்துரையாடவிருக்கும் ஜனாதிபதி பிற்பகல் குவைத் (Kuwait) பிரதமர் எச்.எச்.செயிக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபாவை சந்திக்கும், குவைத் பிரதமருடனும் இருதரப்பு சந்திப்புக்களில் கலந்துகொள்கிறார்.
அதனைத் தொடர்ந்து அநுரகுமார திசாநாயக்க, இன்று இரவு புல்மன் நகர மையத்தில் நடைபெறும் சமூக வேலைத்திட்டம் ஒன்றில் பங்கேற்க உள்ளார்.
இதேவேளை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் (Vijitha Herath) இந்த விஜயத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)