யாழ். வீதியில் ஜனாதிபதியின் அதிகாலை நடைப் பயிற்சி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாலை நடைப் பயிற்சியில் ஈடுபடும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நிலையில் ஜனாதிபதி இவ்வாறு நடைப்பயிற்சியில் ஈடுபடுவது குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், நேற்றைய தினம் (15.01.2026) தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட 'பொங்கல் விழாவில்“ ஜனாதிபதி கலந்துக் கொண்டிருந்தார்.
பொங்கல் விழா
அதன்படி, குறித்த பொங்கல் விழா நேற்று (15.01.2026) யாழ்ப்பாணம் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்றலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழர் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து பொங்கல் பானையில் அரிசியிட்டுப் பொங்கலை ஆரம்பித்து வைத்தார்.
மேலும், தேசிய வீடமைப்புத் திட்டத்தின் ஆரம்ப விழா சாவகச்சேரி - மீசாலையில் இன்று (16.01.2026) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டதையடுத்து இவ்வாறு இன்று அதிகாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நாட்டின் ஜனாதிபதியொருவர் மிகக் குறைவான பாதுகாப்புடன் இவ்வாறு பொதுவெளியில் நடைப்பயிற்சியில் ஈடுபடுவது சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |