இந்தியா செல்லவிருக்கும் ஜோ பைடன் - வெள்ளை மாளிகை அறிவிப்பு
ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடக்கிறது.
இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளார் என வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக இந்தியா விஜயம்

மேலும், அதிபர் பைடன் மற்றும் ஜி 20 தலைவர்கள் உலகளாவிய பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான கூட்டு முயற்சிகள் பற்றி விவாதிப்பார்கள்.
சுத்தமான எரிசக்தி மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது உள்பட பல்வேறு விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியா செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.