காவல்துறை மா அதிபர் பதவி : நாடாளுமன்றில் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
காவல்துறை மா அதிபரின் பதவி இன்னும் வெற்றிடமாகவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று (26) விசேட உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe), பதில் காவல்துறை மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இல்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
காவல்துறை மா அதிபர்
தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka), ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவித்துள்ள நிலையில், பதில் காவல்துறை மா அதிபரை நியமிப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, தொடர்ந்தும் காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோனே (Deshabandu Tennakoon) இருப்பதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவல்துறை மா அதிபர் பணியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்றத்திற்கு நினைவூட்டுவதாகவும் இது தொடர்பில் சபாநாயகரை விரைவில் தலையிடுமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |