கடந்த அரச தலைவருக்கான தேர்தலில் ரகித நேர்மையாக எடுத்த தவறான முடிவு!
சிறிலங்கா அரச தலைவருக்கான கடந்த தேர்தலில் விஜயதாச ராஜபக்சவின் புதல்வர் நேர்மையாக தவறான முடிவு எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
கடந்த அரச தலைவருக்கான தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை வெற்றி பெற செய்ய வேண்டும் என எடுத்த தீர்மானம் நேர்மையாக எடுத்த தவறான முடிவு என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவின் புதல்வர் ரகித ராஜபக்ச (Rakhita Rajapaksa) தெரிவித்துள்ளார்.
மேலும் வாழ்க்கையில் ஒருவர் ஒரு முறையாவது ஏமாற்றமடைந்திருப்பார் எனவும் இதுவும் அது போன்ற ஒன்று, என்னால் ஏமாற்றமடைந்தவர்கள் தயது செய்து மன்னித்துக்கொள்ளுங்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.
ரகித ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவர் பதவிக்கு கொண்டு வர மிகப் பெரிய பங்களிப்புகளை பெரிய அர்ப்பணிப்புகளை செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.