ரணிலையும் அரசையும் மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள்! சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை

Parliament of Sri Lanka M A Sumanthiran Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Laksi Jul 11, 2024 02:27 PM GMT
Report

அதிபர் தேர்தலை குழப்பி பிற்போட முயற்சித்தால் சிறிலங்கா (Sri Lanka) அதிபரையும் இந்த அரசையும் மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) அரச தரப்பைப் பார்த்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு, அதிபர் தேர்தல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தியாக வேண்டும், அதுதான் அரசமைப்பு ஏற்பாடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் தேர்தல் விடயம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று (11) நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையின் மீது உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் தெரிவு: மாவை சேனாதிராஜா வெளியிட்ட முக்கிய தகவல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தலைவர் தெரிவு: மாவை சேனாதிராஜா வெளியிட்ட முக்கிய தகவல்

அதிபரின் பதவிக்காலம்

இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கருத்து தெரிவிக்கையில், "சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் 5 வருடங்கள் தான் என்பது அரசமைப்பிலும் தெளிவாக உள்ளது. அதை இப்போது உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தி விட்டது.

ரணிலையும் அரசையும் மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள்! சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை | President Election Sumanthiran Parliment Speech

இந்தநிலையில் அதிபர் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான அரசமைப்புப் பிரிவுகளில் மாற்றம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டிய தேவை எதுவும் இல்லை.

அதிபரின் பதவிக்காலத்தை ஆறு வருடங்களுக்கு மேல் நீடிப்பதாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற அரசமைப்பின் 83 (ஆ) பிரிவு இவ்விடயங்களில் சம்பந்தப்பட்டது அல்ல.

அதை மாற்றி அமைக்க வேண்டிய தேவையும் இல்லை. அதை மாற்றி அமைப்பதாயின் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை என்ற கருத்து இருந்ததாலேயே 19 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டபோது அதை மாற்றாமல் அப்படியே விடுகின்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

டயானாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிஐடி

டயானாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிஐடி

அதிபரின் பதவிக்காலம் 

அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின்  (Ranil Wickremesinghe) இணக்கத்தோடு தான் அப்படியே அதை விட்டு விட முடிவு எடுக்கப்பட்டது. அதனால் சர்ச்சைகளோ குழப்பங்களோ ஏதுமில்லை.

ரணிலையும் அரசையும் மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள்! சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை | President Election Sumanthiran Parliment Speech

ஏற்கனவே சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் 5 வருடங்கள்தான் என்பது திட்டவட்டமாகத் தீர்மானிக்கப்பட்ட விடயம். இந்த 83 (ஆ)பிரிவு அரசமைப்பில் இருப்பதால் எந்தக் குழப்பமும் புதிதாக வந்து விடாது.

ஆனால், இந்தப் பிரிவுக்கு திருத்தம் கொண்டு வருகின்றோம் என்று குழம்பத்தை ஏற்படுத்த அதிபரின் தரப்பு முயலுகின்றனர் என்று தோன்றுகின்றது.

தொடர் வேலைநிறுத்தங்களின் பின்னணியில் ரணில்: அனுர தரப்பு குற்றச்சாட்டு

தொடர் வேலைநிறுத்தங்களின் பின்னணியில் ரணில்: அனுர தரப்பு குற்றச்சாட்டு

சர்வஜன வாக்கெடுப்பு 

அந்தப் பிரிவைத் திருத்த சர்வஜன வாக்கெடுப்பு என்ற நிலைப்பாடு வருமானால், அதைக் காட்டி தம்முடைய பதவிக்காலம் 5 வருடங்கள்தானா என்பதை ஒட்டிய சர்ச்சையைக் கிளப்பலாம் என்று அதிபர் எண்ணுகின்றார்.

ரணிலையும் அரசையும் மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள்! சுமந்திரன் எம்.பி எச்சரிக்கை | President Election Sumanthiran Parliment Speech

எது, எப்படி என்றாலும், நாடு வரும் ஒக்டோபர் 17 இற்கு முன்னர் அதிபர் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. அது சட்ட ரீதியான கட்டாயம்.

அதில் கை வைக்க அல்லது தேர்தலைத் தள்ளிப்போட முயற்சி எடுக்கப்பட்டால் அரசையும் அதிபரையும் மக்கள் வீதி வீதியாக துரத்தி அடிப்பார்கள். ஓட ஓட விரட்டுவார்கள். அதனை முன் எச்சரிக்கையாகக் கூறி வைக்க விரும்புகின்றேன்." என தெரிவித்துள்ளார்.

ஹிருணிகாவின் பிணை மனு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

ஹிருணிகாவின் பிணை மனு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024