விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு..! விளைச்சலை இரட்டிப்பாக்க புதிய திட்டம்
நாட்டின் நெல் விளைச்சலை அடுத்த ஆறு பருவங்களுக்குள் இரட்டிப்பாக்குவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க விவசாய அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போதுள்ள நெற்பயிர்களின் அளவு 08 இலட்சம் ஹெக்டேயர்களாகும், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு பருவங்களில் 1.3 மில்லியன் ஹெக்டேர் நெல் வயல்களில் பயிரிடப்படுகிறது.
இதனால் கிடைக்கப்பெறும் நெல்லின் மொத்த விளைச்சல் சுமார் 5.2 மில்லியன் மெற்றிக்தொன் ஆகும். எனினும் உற்பத்தி செய்யக்கூடிய அரிசியின் அளவு 3.1 மில்லியன் மெட்ரிக் தொன் ஆகும்.
புதிய தொழில்நுட்பம்
நாட்டில் நுகர்வுக்கு வருடாந்தம் 2.4 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி தேவைப்படுகிறது.
இந்நிலையில், நெல் விளைச்சலை அதிகரிப்பதற்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2023 ஆம் ஆண்டு விவசாயத்திற்காக 132 பில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகவும், 2024 ஆம் ஆண்டு நெல் விளைச்சலில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அரசாங்கத்தால் அதிக பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.