இந்திய-மாலைதீவு விவகாரம்: முகமது முய்ஸூக்கு எதிராக சொந்த நாட்டிலேயே ஒலித்த குரல்
இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளுக்கிடையில், மோதல் போக்கு தொடரும் நிலையில் மாலைதீவு அதிபர் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை அந்த நாட்டிலேயே எழுந்துள்ளது.
இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது.
மோதலுக்கான காரணம்
இந்த மோதலுக்கு காரணம், இந்தியா குறித்தும் இந்தியப் பிரதமர் மோடி குறித்தும் மாலைதீவு அமைச்சர்கள் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களே ஆகும்.
இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களிடம் மாலைதீவு அதிபர் முகமது முய்ஸூ முறையாக மன்னிப்பு கேட்க வேண்டுமென அங்குள்ள ஜும்ஹூரி கட்சித் தலைவர் காசிம் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சர்ச்சை கருத்துகள்
மேலும், இந்தியா மற்றும் அந்நாட்டு பிரதமர் மோடி தொடர்பிலும் மூன்று மாலைதீவு அமைச்சர் சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்த நிலையில், இப்ராஹிம் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் போது காசிம் இப்ராஹிம், “சீனா பயணத்திற்குப் பிறகு அவர் தெரிவித்த கருத்துகளுக்கு இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடியிடம் முறைப்படி மன்னிப்பு கேட்குமாறு மாலைதீவு அதிபர் முய்ஸுவை நான் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
You May Like This Video
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |