அநுரவின் அழைப்பை ஏற்ற வெளிநாடொன்றின் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று, வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (Tô Lâm) எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி டோ லாம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் விசேட உரை
அத்துடன், இலங்கையின் ஏனைய அரசியல் தலைவர்களையும் அவர் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் மிக முக்கிய நிகழ்வாக, மே மாதம் 8ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் விசேட உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியிலான ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த விஜயம் அமையவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |