இன்று நாடாளுமன்றில் விசேட உரையாற்றவுள்ள அதிபர்(காணொளி)
அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து அதிபர் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்றுக் கொள்ளப்பட உள்ள கடன் தொடர்பிலும் அவர் இவ்வாறு இன்றைய தினம் விளக்கம் அளிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா

இதேவேளை கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதாக சீனா இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் நிலைப்பாடு கடந்த மாதம் (22) சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவிக்கப்படிருந்தது.
இது தொடர்பான அறிவிப்பை எழுத்து மூலம் சீனா வெளியிட்டிருந்தது.
மேலும், நாட்டின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை கடந்த 16ஆம் திகதி, சர்வதேச நாணய நிதியத்துக்கு இந்தியா எழுத்துபூர்வமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..