நாடு திரும்பினார் அதிபர் ரணில்!
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.
அதன்படி, நேற்று (10) இரவு அதிபர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.
சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-309 மூலம் அதிபர் மற்றும் அவரது தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
முக்கிய உரை
கடந்த 8ஆம் திகதி இரவு அதிபர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் தனது இந்த விஜயத்தின் போது, 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொண்டு முக்கிய உரையினையும் ஆற்றியுள்ளார்.
இருதரப்பு கலந்துரையாடல்
இது தவிரவும் இந்த மாநாட்டில் வைத்து பல நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருந்தார்.
மேலும், அண்மையில் உக்கிரம் காணும் இஸ்ரேல் ஹமாஸ் போரில் அமெரிக்கா வகிக்கும் பங்கின் காரணமாக இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு பாதிக்கப்படும் என அதிபர் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |