இலங்கையில் நாட்டரிசிக்கு தட்டுப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Sri Lanka
Economy of Sri Lanka
Rice
By Shalini Balachandran
தற்போதைய நாட்டரிசி தட்டுப்பாடு அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை மரதகஹமுல அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பி.கே.ரஞ்சித் (P. K. Ranjith) தெரிவித்துள்ளார்.
நாட்டரிசி விலை உயர்வால், நாட்டரிசி விற்பனையில் இருந்து வியாபாரிகள் விலகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நெல் அறுவடை
இவ்வாறு சந்தையில் நாட்டரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதான பருவத்தில் நெல் அறுவடை வரை இந்த அரிசி தட்டுப்பாடு தொடரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்தையில் குறிப்பிட்ட சில வகை அரிசிகளின் தட்டுப்பாடு மற்றும் அதிக விலை காரணமாக அரிசி விற்பனை சுமார் 50% வரை குறைந்துள்ளதாக மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்