சமாதானப் பயண யாத்திரைக்கு ஜனாதிபதி ஆதரவு
இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள சமாதானப் பயண யாத்திரைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், அனைத்து மக்களிடையேயும் விழிப்புணர்வு, அன்பு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இன்று (21.04.2026) ஆரம்பிக்கப்படும் நாடளாவிய அமைதிப் பாத யாத்திரையை ஆதரிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.
புனித பயணத்தின் முக்கியத்தும்
புத்தரின் புனிதப் பொருட்களையும் ஒரு போதி மரக்கன்றையும் சுமந்துகொண்டு, தம்புள்ளையிலிருந்து புறப்பட்டு நமது தீவு முழுவதும் பயணிக்கும் இந்தப் புனிதப் பயணத்தின்போது, நமது பாரம்பரியத்தை வரையறுக்கும் அமைதி மற்றும் கருணையின் நீடித்த விழுமியங்களைப் பற்றி சிந்திக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் அழைக்கிறேன்.
I am honoured to support the Walk for Peace journey across Sri Lanka, commencing today, promoting mindfulness, loving-kindness, unity and harmony among all people.
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) April 21, 2026
As this sacred walk sets out from Dambulla and travels across our island, carrying the Sacred Relics of the Buddha…
இந்தப் பயணம் நமது தேசத்தில் ஒற்றுமையை வலுப்படுத்தி, உலகிற்கு அமைதியின் செய்தியைப் பகிரட்டும்." என குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |