மக்கள் அதிகாரத்துக்கே முன்னுரிமை: ஜனாதிபதி உறுதி!
வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள் தின நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஒன்றாக குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தற்போது ஒன்றிணைந்து விட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் அதிகாரம்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த காலங்களில் அரசியல் தலைமைகளிடம் வாக்குமூலம் பெற விசாரணை அதிகாரிகள் அவர்களுடைய வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது எனினும் தற்போது சக மனிதர்கள் செல்லும் அதே வாசல் வழியாக அரசியல் தலைமைகளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று வருகின்றனர்.

எங்களுடைய அரசாங்கத்தை வீழ்த்துவதாக கதை பேசி வருகின்றனர்.
அது நடக்காது. இந்த அரசாங்கம் மேலும் உறுதியாக கட்டியெழுப்பப்படும். கட்சி பேதங்களின்றி அரசாங்கம் தனது பணியை நிறைவேற்றும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே." என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |