ரணிலை கழற்றிவிடும் மகிந்த : அதிபர் தேர்தலில் களமிறங்கும் மொட்டு வேட்பாளர்
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Election
By Sumithiran
எதிர்வரும் அதிபர் தேர்தலில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரை முன்னிறுத்துவதாக அக்கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க விரும்பினால் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அதிபர் வேட்பாளராக போட்டியிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் தேர்தலில் போட்டியிட மாட்டார்
ஆனால் ரணில் விக்ரமசிங்க இந்த அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டார் என உத்தரவாதம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.
அநுர திஸாநாயக்கவுக்கு உதவி செய்து பிரதமர் பதவி
ஒருவேளை அநுர திஸாநாயக்கவுக்கு உதவி செய்து பிரதமர் பதவியைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் இருப்பதாகவும், விக்ரமசிங்க இவ்வாறான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்குப் பழகிவிட்டதாகவும் அவர் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்