சிக்குவாரா கோட்டாபய! அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு
கோட்டாபய ராஜபக்சவினால் (Gotabaya Rajapaksa) நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டெடுக்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பெருமளவு பணத்தை வீணடித்ததாகக் கூறப்படும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் குறித்து சிறப்பு விசாரணையை ஆரம்பிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அரசாங்கம், அத்தகைய விசாரணைகளை நடத்தி, அந்த ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களிடமிருந்தோ அல்லது அப்போதைய அரசாங்கங்களின் தலைவர்களிடமிருந்தோ பணத்தை மீட்டெடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.
மூன்றரை மில்லியன் மோசடி
கடந்த காலங்களில் பல்வேறு விடயங்களை விசாரிக்க 14 ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இரண்டின் பரிந்துரைகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, உபாலி அபேரத்னவின் தலைமையில் நிறுவப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, இந்த நாட்டின் மக்களின் பணத்தில் மூன்றரை மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்தப் பணத்தை ஆணைக்குழுவை நியமித்த முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடமிருந்தோ அல்லது உபாலி அபேரத்ன உள்ளிட்ட மூன்று ஆணைய உறுப்பினர்களிடமிருந்தோ மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 3 நாட்கள் முன்
