சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான திகதி: ஆணைக்குழு வெளியிட்ட தகவல்
அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தல் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கு பின்னர் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நேற்று (16) கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழுவிற்கு அதிகாரம்
அதன் போது, அதிபர் தேர்தல் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனவும், தேர்தல் திகதியை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நேற்று (16) நள்ளிரவு முதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பு மற்றும் அதிபர் தேர்தல் சட்டத்தில் உள்ள உண்மைகளுக்கு அமைய திகதிகள் நிர்ணயிக்கப்படும் எனவும் அதிபர் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளின் திகதிகள் வேறு எக்காரணம் கொண்டும் மாற்றப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாக்கெடுப்பு
அதிபர் தேர்தலுக்கான திகதிகள் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி தேர்தலை செப்டெம்பர் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கும் இடையில் நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 16 முதல் 21 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும் என்றும், தேர்தலை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து 4-6 வாரங்களுக்குள் நடத்தப்பட வேண்டும் என்றும் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |