அதிபர் தேர்தல் தொடர்பாக பேசுவது தேவையற்றது - டலஸ் அழகபெரும
எதிர்கட்சித் தலைவர் சஜித் தான் எதிரணியின் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பதும், தேசிய மக்கள் சக்தி அனுரகுமாரவை அதிபர் வேட்பாளராக அறிவிப்பது போன்ற தேர்தல் தொடர்பாக பேசுவது அவசியமற்ற விடயங்களென நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “ஜனநாயகத்திற்காக நிற்போம் என்ற தொனிப்பொருளுடன் எமது பொது எதிரணியை உருவாக்குவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிற்போடப்படுமாயின்
எனவே ஜனநாயகத்தை நிலைநாட்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென நாங்கள் நம்புகின்றோம்.
அதிபர் தேர்தல் பிற்போடப்படுமாயின் அதைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. எனவே இப்போது அதிபர் வேட்பாளரைப் பற்றி பேசுவது பொருத்தமற்றது.” என்றார்.