அதிபர் தேர்தல் : வெளியானது அறிவிப்பு
கொடிய நோயுற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்கு ரணில் விக்ரமசிங்க சிறந்த வைத்தியர் எனவும், அதன்படி இந்நாட்டில் ஒக்டோபர் 14ஆம் திகதி புதிய அதிபர் நியமிக்கப்படவுள்ளதாகவும், அதிபர் தேர்தல் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் காணி மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவை எதிர்காலத்தில் ஒரு முறையாவது அதிபராக்கும் பொறுப்பு நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் முடிவு செய்ய வேண்டும்
இந்த நாட்களில் மக்கள் கசப்பு மருந்தை குடித்தாலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளியை விடுதிஅறையில் வைத்து, மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு செல்வதா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று ஹரின் பெர்னாண்டோ இங்கு கூறினார்.
நாட்டு மக்களுக்கு காணி உரிமை வழங்கும் உறுமய எனப்படும் இரண்டு மில்லியன் பத்திரங்களில் கைச்சாத்திடும் தேசிய வைபவம் எதிர்வரும் 5ஆம் திகதி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க தயாராகியுள்ளார். அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த வேலைத்திட்டத்தை அவதானிக்க நேற்று 3ஆம் திகதி வந்த போது இதனைக் குறிப்பிட்டார்.
உலகின் ஒரே தலைவர்
எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அதிபர் வேட்பாளராக களமிறங்குவார் என்றும், நாட்டில் மூன்று வீதமான தேர்தல்களில் வெற்றி பெற்ற மேலும் 47 வீதமான குழுக்களைக் கண்டுபிடிப்பது கனவு என்றும் அந்தக் கனவுகள் ஒருபோதும் நனவாகாது என்றும் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.
ஒரு நாட்டை மிகக் குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்றிய உலகின் ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என சுட்டிக்காட்டிய அவர், நோயாளி ஒருவர் இறக்கும் வேளையில் கசப்பு மருந்து கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க நோயுற்றவர்களைக் குணப்படுத்தும் சிறந்த வைத்தியர் எனவும், அவர் தயக்கம் காட்டினாலும் மக்கள் அவரை நாட்டின் அதிபராக வர இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |