அதிபர் தேர்தல் : வெற்றி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக சரத் பொன்சேகா உறுதி!
இலங்கையில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர், அரசியல் ரீதியில் முடிவொன்றை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் அதிபர் தேர்தல் முதலில் நடத்தப்படும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதனை விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிபர் தேர்தல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்திவிட்டு அதிபர் தேர்தலை நடத்தினால் உறுப்பினர்களின் ஆதரவை பெறமுடியாமல் போகும்.
அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே நான் அரசியல் ரீதியில் முடிவை எடுப்பேன்.
அப்போது களநிலவரம் என்னவென்று தெரிய வரும்.
வெற்றி வேட்பாளர்
கடந்த முறை கூட கட்சி அழுத்தத்தால் ரணில் பின்வாங்கி, சஜித் களமிறக்கப்பட்டார்.
எது எப்படி இருந்தாலும் கள நிலவரத்துக்கேற்ப வெற்றி வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் அந்த வேட்பாளருக்கு நான் அதரவு வழங்கமாட்டேன்” என் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |