அதிபர் தேர்தல் எப்போது..! தேர்தல்கள் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு
Election Commission of Sri Lanka
Sri Lanka
Election
By Sumithiran
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அதிபர் தேர்தல் உரிய காலப்பகுதியில் நிச்சயமாக நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எஸ்.ரத்நாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை நடத்தவேண்டியுள்ளதால் அதிபர் தேர்தலை நடத்துவதில் எவ்வித தாக்கமும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.
காலக்கெடுவிற்குள் தேர்தல்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரகாரம் அதிபர் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் எனவும் ஆணைக்குழு கோரிய 10 பில்லியன் ரூபா நிதி அமைச்சிடம் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதால் உரிய காலக்கெடுவிற்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிபர் தேர்தல் செப்டெம்பர் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்குள் நடைபெறும் எனவும், ஜுலை அல்லது ஒகஸ்ட் மாதத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 5 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி