ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது... தீர்மானிக்காத 40 இலட்சம் மக்கள் : கணக்கெடுப்பில் வெளியான தகவல்
நாட்டிலுள்ள 40 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை எனஅரசாங்கத்தின் புலனாய்வு அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினர் வீடு வீடாகச் சென்று மேற்கொண்ட சில ஆய்வுகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் நிலவும் அரசியல் நிலவரங்கள், வேட்பாளர்களின் புகழ், நாட்டைக் கட்டியெழுப்பும் திறன் போன்றவற்றை ஆய்வு செய்த பிறகே வேட்பாளரை தேர்வு செய்வோம் என 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
குழப்பமான நிலை
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 20 இலட்சம் இளைஞர்கள் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறமாட்டார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்கள்
பெருந்தொகையான மக்களின் குழப்பமான நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஒரு அணியாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa ) மற்றுமொரு அணியாகவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ( Anura Kumara Dissanayake) மற்றுமொரு அணியாகவும் தேர்தலில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |