சுற்றுலாத்தளமாகும் அதிபர் மளிகை - ரணில் அதிரடி தீர்மானம்
Colombo
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
By Kiruththikan
கொழும்பு கோட்டையில் உள்ள அதிபர் மாளிகைக்கு பதிலாக கோட்டை பிரதேசத்தில் புதிய அதிபர் மாளிகையை அமைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோட்டையிலுள்ள அதிபர் மாளிகை உட்பட பல விசேட இடங்களை பயன்படுத்த தீர்மானித்ததன் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அதிபர் மாளிகையை கோட்டை பிரதேசத்தில் நிறுவவும், தற்போது கொம்பஞ்சாவீதியில் உள்ள விமானப்படை தலைமையகத்திற்கு காவல்துறை தலைமையகத்தை கொண்டு வரவும், வெளிவிவகார அமைச்சை வேறு இடத்திற்கு மாற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க திட்டம்

அதன்பிறகு, இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி