ஐபிசி தமிழின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு ஜனாதிபதி ஊடக விருது!
தொலைக்காட்சிப் பிரிவில் வருடத்தின் சிறந்த தமிழ் மொழிமூல நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான விருதை ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப்பிரிவு முகாமையாளர் சர்மிலா வினோதினி பெற்றுள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ஊடக விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று(11.10) கொழும்பு நெலும் பொகுன மஹிந்த ராஜபக்ச அரங்கில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் நோக்கம்
நாட்டில் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக கலாசாரத்தை வளர்ப்பதில் இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக வல்லுநர்களின் பங்களிப்பை அங்கீகரித்து பாராட்டுவதை இந்த விருது வழங்கும் நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த விருதுகள் அச்சு, இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடக தளங்களில் சிறந்து விளங்குவோரை ஊக்குவிக்கும் அதேவேளை, பொறுப்பான ஊடகவியலை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி ஊடக விருதுகள், ஊடகத் துறையில் நேர்மை, படைப்பாற்றல் மற்றும் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியவர்களை கௌரவிக்கும் மற்றும் செய்தியாளர்களின் சிறப்பைக் கொண்டாடும் முக்கிய தேசிய நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |