பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு இதுவே வழி- சட்டத்தரணி சுகாஸ்

prisoners vavuniya press meet sugash prevention of terrorism act
By Kalaimathy Jul 19, 2021 08:10 AM GMT
Report

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு, குரல் கொடுப்பது மட்டுமின்றி சர்வதேசத்தினுடைய அழுத்தம் மிக முக்கியமானது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், வழக்கறிஞருமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையைப் பொறுத்த வரை பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது ஒரு குழப்பகரமான வியாக்கியானங்களைக் கொண்ட அல்லது பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை திட்ட வட்டமாகச் சட்ட ரீதியாக வரையறுக்காத ஒரு சட்ட ஏற்பாடாகவே காணப்படுகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது ஸ்ரீலங்கா அரசினுடைய அல்லது ஸ்ரீலங்கா அரசை பல்வேறுபட்ட காலத்துக்குக் காலம் ஆட்சி செய்த, பல்வேறுபட்ட அரசாங்கங்களினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக செயல்படுகின்றவர்களை அல்லது அரசாங்கங்களினுடைய அரசியல் கொள்கைகளுக்கு மாறான அரசியல் நிலைப்பாடுகளை கொண்டிருந்தவர்களை அடக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான கருவியாகத் தான் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பார்க்க முடியும்.

ஏனென்றால், இலங்கையிலே நடைபெற்றது ஒரு பயங்கரவாதம் கிடையாது. அது ஒரு இனம், தன்னுடைய விடுதலையை வலியுறுத்தி சர்வதேச சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் விடுதலைக்காக செயல்படுவது பயங்கரவாதம் ஆகாது.

அந்தவகையில் இலங்கையிலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், அவர்கள் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகள் காரணமாகவே கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதாவது இன்று சிறைகளிலே நீண்ட காலமாக வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்படாது அல்லது ஆரம்பிக்கப்பட்ட வழக்கு விசாரணை முடிவடையாது எப்பொழுது தங்களுடைய வழக்குகள் முடிவடையும் என்பது கூடத் தெரியாது, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

2009ஆம் ஆண்டுக்குப் பின் பயங்கரவாதம் இல்லை. அல்லது பயங்கர வாதத்தை நாங்கள் முறியடித்து விட்டோம் என்று இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்திருந்தது உண்மை. ஆனால் 2009இற்குப் பின்னர் நான் மேலே குறிப்பிட்ட வாறு, தங்களுடைய அரசியல் கொள்கைகளுக்கு மாறாக செயல் படுகின்றவர்களை அடக்குவதற்கு தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குப் பின்னால் விரும்பியோ, விரும்பாமலோ கொண்டு வருவதற்கான ஒரு உத்தியாக, ஒரு சாதனமாக இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஸ்ரீலங்கா அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்பது தான் உண்மை.

இன்று தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமின்றி, ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் தலைவர்களும் சிறைகளிலே அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே இது இலங்கை அரசும், அரசை ஆளுகின்ற அரசாங்கமும் தங்களினுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் வராதவர்களை அல்லது ஏற்காதவர்களை அடக்குவதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றது என்பதற்கு மிகச்சிறந்த ஆதாரம் இது.

இதற்கான தீர்வுகள் என்று வருகின்ற பொழுது, முற்று முழுதான ஒரு சர்வதேச விசாரணை ஒன்று இலங்கையிலே நடைபெற்ற இனப் படுகொலைக்கு நடக்கின்ற பொழுது அங்கு ஸ்ரீலங்கா அரசை வழிக்கு கொண்டு வருவதற்காக, இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை, முற்றாக நீக்க வேண்டும் என்கின்ற ஒரு பேரம் பேசலை, அல்லது ஒரு நிபந்தனையை விதிக்க முடியும்.

அல்லது இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை போன்ற பன்னாட்டு மன்றங்களின் ஊடாக வழங்கப்படுகின்ற அழுத்தங்களின் ஊடாக இந்தப் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தான் ஒரே தீர்வு. ஆகவே, இந்தப் பயங்கர வாதத் தடைச் சட்டத்தை முற்றாக அகற்றுவதற்கு, நீக்குவதற்கு, ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் ஒன்று பட்டு குரல் கொடுப்பது மட்டும் தீர்வைத் தராது. அதையும் தாண்டி சர்வ தேசத்தினுடைய அழுத்தம் மிக முக்கியமானது எனவும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி