தென்னாபிரிக்க பொறியில் புலம்பெயர் அமைப்புகள்..!
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை தீர்க்கும் வகையில் கொழும்பிலிருந்து தேசிய நல்லிணக்க பூங்கொத்து நீட்டப்படுவது தெரிகின்றது.
13 ஆவது திருத்தத்தின் நடைமுறை, சர்வதேச தரத்துக்கு அமைவான புதிய பயங்கரவாத தடைச் சட்டம், உண்மையை கண்டறியும் பொறிமுறை என இந்த தேசிய நல்லிணக்கம் காட்சிப்படுத்தப்படுகின்றது.
நல்லிணக்க பொறிமுறை

இந்த நகர்வுகளின் ஒரு பகுதியாக, இலங்கையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்க பொறிமுறைக்காக விரைவில் புலம்பெயர் அமைப்புகள் சில தொடர்புகொள்ளப்படும் சாத்தியங்களும் தெரிகின்றன.
அநேகமாக இந்த மாத இறுதியில் இதற்கான சந்திப்புகள் மற்றும் பேச்சுக்கள் இடம்பெறலாம் என ஊகிக்கப்படுகிறது.
இந்தியா இல்லை என்றால், தென்னாபிரிக்காவில் இதற்கான சந்திப்புகள் மற்றும் பேச்சுகளில் பங்கெடுக்கக்கூடிய சாத்தியப்பாடுகளை உடைய புலம்பெயர் அமைப்புகளும் ஊகிக்கப்படுகின்றன.
இதற்காக, மேற்குலகத்துடன் நல்ல தொடர்பாடலைக் கொண்ட ஒரு அமைப்பு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.