சிறைச்சாலைகள் சட்ட மறுசீரமைப்புக்கு ஐவரடங்கிய குழு: ஜனாதிபதியின் அறிவிப்பு
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளை புதுப்பிக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முப்பீடங்களின் மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று (08-10-2026) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விசேட கலந்துரையாடல்
இந்த விசேட கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் பிரின்ஸ் சேனாதீர, பியுமந்தி பீரிஸ், வசந்த ஆரியரத்ன, ஆர்.எம்.ஜீ. சேனாரத்ன மற்றும் ஏ.சீ. கஜநாயக்க ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சிறைச்சாலைகள் திணைக்களம் ஆணையாளர் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் அச்சட்டத்தின் மூலம் விதிக்கப்பட்ட நிலையான கட்டளைகளைக் காலத்திற்கு ஏற்ப மறு ஆய்வு செய்வதற்கும் தற்போதைய மத, கலாச்சார, சட்ட, நிர்வாக மற்றும் நடைமுறைத் தேவைகளுக்கு அமைய அவற்றை புதுப்பிப்பதற்கும் உள்ள தேவையை கருத்திற்கொண்டே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அமைப்பின் செயல்திறன், நல்லாட்சி, பாதுகாப்பு, கலாச்சார விழுமியங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்குத் தேவையான திருத்தங்களை அடையாளம் கண்டு பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |