மீண்டும் அதிகரிக்கவுள்ள விலை? வெளியான அறிவிப்பு
price
increase
milkpowder
By Sumithiran
டொலர் தட்டுப்பாட்டிற்கான தீர்வு வழங்கப்படும் வரை இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு நாட்டில் தட்டுப்பாடு நிலவும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக 50 சதவீதமான பால்மாக்களையே இறக்குமதி செய்ய முடிகின்றது. அதேநேரம், இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகளில் மீண்டும் திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பால்மா இறக்குமதிக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள டொலர் தட்டுப்பாட்டுக்கு நிவாரணம் கோரி பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்