அமெரிக்காவிலும் ரொக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்
அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பக்குள்ளாகியுள்ளனர்.
வோஷிங்டனில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை ரொக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆயிரத்து 500 ரூபாயாக விற்கப்பட்ட அரை கிலோ மீன் விலை 3 ஆயிரமாக உயர்ந்திருப்பதாகவும் இதனால், தான் கோழி இறைச்சியை வாங்கி சமைத்து வருவதாகவும் குடியிருப்பு வாசி ஒருவர் தெரிவித்தார்.
அதேபோல் நிறைய பணம் செலவழித்து மிக மிக குறைந்த அளவிலான பொருட்களையே வாங்க முடிவதாகவும், ஒரு அப்பிளின் விலை 105 ரூபாயாக உயர்ந்திருப்பதாகவும் மற்றொருவர் கூறினார்.
அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தம் மற்றும் சரக்கு போக்குவரத்து பாதிப்பாலேயே இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக பலரும் கருதுகின்றனர்.
