இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ் விலைகளில் மாற்றம்
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து சில உணவுகளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய விலை மாற்றம் இன்று (6) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை நேற்று (5) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு விலை
அதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதற்கமைய அதன் புதிய விலை 4,765 ரூபாயாகும்.

5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 308 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,910 ரூபாயாகும்.
2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 890 ரூபாயாகும்.
சிற்றுண்டிகளின் விலை
இந்தநிலையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பைத் தொடர்ந்து கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப்பொதி ஆகியவற்றின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |