தொடரும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை : முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்
சம்பளப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சுகவீன விடுமுறைப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த போராட்டமானது இன்று (30) முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி, தகவலை அதிபர் மற்றும் ஆசிரியர் சம்பள சமத்துவமின்மைக்கு எதிரான தேசிய சங்கத்தின் ஏற்பாட்டாளர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
சம்பள பிரச்சினை
அத்தோடு, சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றுடன் 29 நாட்களை கடந்துள்ளது.
இதன் காரணமாக, பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிய குழுவின் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இணக்கப்பாடு எட்டப்பட்ட மாதாந்த கொடுப்பனவு மற்றும் 15 சதவீத சம்பளம் குறைக்கப்பட்டமை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரியே கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |