அதிபர் சேவை போட்டிப்பரீட்சை ஒத்திவைப்பு : வெளியான அறிவிப்பு
Government Employee
Sri Lanka
Department of Examinations Sri Lanka
By Sathangani
இலங்கை அதிபர் சேவையின் தரம் 3ற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
நாளையதினம் (26) நடைபெறவிருந்த குறித்த பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தவிர்க்க முடியாத காரணங்களினால் போட்டிப்பரீட்சை ஒத்திவைக்கப்படுவதாக, பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
பரீட்சை நடைபெறும் புதிய திகதி
அத்துடன் பரீட்சை நடைபெறும் புதிய திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை மே மாதம் 24 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி