வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை பிடிக்க கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்
வெளிநாடுகள் பலவற்றுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்களை விரைவாக கைச்சாத்திட சிறி லங்கா காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையில் தேடப்படுபவர்களை விரைவாக நாட்டுக்கு அழைத்து வர முடியும் என்பதுடன், இதுவரையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளவர்களை
பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளவர்களை நாட்டுக்கு அழைத்து வந்து அவர்களை சட்டங்கள் மூலம் கையாள்வதே இதன் நோக்கமாகும்.
42 பேரை கைது செய்ய சிவப்பு அறிவித்தல்
இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42 பேரை கைது செய்ய சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உடன்படிக்கைகளை பயன்படுத்தி அவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்படுவர் எனவும் பதில் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
துபாய், இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தங்கியுள்ள இதுபோன்ற 42 குற்றவாளிகளுக்கு எதிராக இந்த சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |