யாழில் வயலுக்குள் குடைசாய்ந்த பேருந்து!
யாழ்ப்பாணம் (Jaffna) - அராலி பகுதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் 789 வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்தே சற்றுமுன்னர் இவ்வாறு விபத்துக்குள்ளானது.
குறித்த பேருந்தானது யாழில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு சித்தங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள வயலுக்குள் பாய்ந்துள்ளது.
காவல்துறையினர் விசாரணை
குறித்த பேருந்து அண்ணளவாக 10-15 kmh வேகத்தில் சென்றுகொண்டிருந்தவேளை வலது புறமாக வீதிக்கு மாறி மெதுவாக சென்று வயலுக்குள் விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் எந்தவிதமான உயிராபத்தும் ஏற்படவில்லை என குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்து வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்