அதிகரிக்கப்படும் மேலுமொரு கட்டணம்..! வெளியான அறிவித்தல்
தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டண உயர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி ஆரம்ப பதிவுக் கட்டணமான 15,000 ரூபா தற்போது 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய கட்டணம் 50,000 அறவிடப்பட்டுள்ளது.
பதிவு புதுப்பித்தல் கட்டணம்
மேலும், பதிவு புதுப்பித்தல் கட்டணம் 15,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 10,000 ரூபாவில் இருந்து தற்போது 25,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியின் உரிமம் காலாவதியான முதல் மாதத்தில் தாமதக் கட்டணம் 10,000 ரூபாவாகவும், உரிமம் காலாவதியான 31 தொடக்கம் 90 நாட்களில் 25,000 ரூபாவாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 90 நாட்களுக்குப் பிறகு தாமதக் கட்டணம் 35,000 ரூபாவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
