அரசாங்கத்தின் தனியார் மயமாக்கல் முயற்சி ஒத்திவைக்கப்பட வேண்டும்: மகிந்த கோரிக்கை
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அரசாங்கத்தின் தனியார் மயமாக்கல் முயற்சியை எதிர்வரும் அதிபர் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட தகவலை அவர் வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்தின் இடைக்காலத் தன்மையை அவர் வலியுறுத்தியுள்ளார்.
வாக்காளர் முடிவு
இதனுடன், அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பான முடிவுகளை வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆணைக்கு ஏற்ப உள்வரும் நிர்வாகத்திடம் விட வேண்டுமென மகிந்த ராஜபக்ச பரிந்துரை செய்துள்ளார்.
அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை விரைவாகப் பிரித்தெடுப்பதில் அதிகரித்துவரும் அதிருப்தியின் மத்தியில் இந்தப் பரிந்துரையானது முன்வைக்கப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தல்
அத்தோடு, அடுத்த அதிபர் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை அரச சொத்துக்கள் அல்லது நிறுவனங்களை விற்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட வேண்டுமென மகிந்த ராஜபக்ச முன்மொழிந்துள்ளார்.
மேலும், புதிய அரசாங்கம் அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களை தேர்தலில் அவர்கள் பெறும் ஆணைக்கு ஏற்ப கையாள முடியுமென அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |