பல மில்லியன்கள் மோசடி : பேராசிரியர் கைது
CID - Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
சிறி ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற மூத்த பேராசிரியர் ஒருவர் பல மில்லியன் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத்துறை (CID) தெரிவித்துள்ளது.
முதுகலை மேலாண்மை நிறுவனத்தின் டுபாய் கிளையின் நிர்வாக பணிப்பாளராக இருந்த இவர், பல மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பாகவே கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத்துறை வெளியிட்ட தகவல்
சந்தேக நபர் அந்த நிறுவனத்தில் ரூ. 58.2 மில்லியன் மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார், மேலும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பன்னிபிட்டிய, கலல்கொடவைச் சேர்ந்த 78 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்