அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கும் பேராசிரியர்கள்?
srilanka
university
professors
By Sumithiran
கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடுவதற்கு அனைத்துப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் ஒரு கட்டமாக கொழும்பு – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் நேற்றையதினம் அமைதியான போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.
கொழும்புப் பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
எனினும் ஓகஸ்ட் 03ஆம் திகதி இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி