நாடாளுமன்ற தேர்தல்: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு கடமைகளுக்காக 63,145 காவல்துறை உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபரும் காவல்துறை ஊடகப் பேச்சாளருமான நிஹால் தல்துவ (DIG Nihal Talduwa) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று (08.11.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த காவல்துறை மா அதிபர், எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
விசேட அதிரடிப்படை
இந்த தேர்தல் காலத்தில் பாதுகாப்பு கடமைகளுக்காக 3200 காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் முப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், 12,227 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3109 நடமாடும் சேவைப் பயணங்களை நடைமுறைப்படுத்தவும், இலங்கை முழுவதும் 269 சாலைத் தடைகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், 214 கலகத் தடுப்புக் குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு நாசகார நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்காக புலனாய்வு அதிகாரிகளை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |