ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கான தடை மேலும் நீடிப்பு!
India
Corona
Italy
SriLanka
Bangaldesh
By Chanakyan
ஸ்ரீலங்கா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கான தற்காலிக தடையை இத்தாலி மேலும் நீடித்துள்ளது.
இத்தாலி பிரஜைகள் உள்வாங்கப்படாத இந்த தடை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அமுல்ப்படுத்தப்பட்டது. நேற்றைய தினத்துடன் இந்த தடை நிறைவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பதற்கான தடை எதிர்வரும் ஜூன் மாதம் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட பி.1.617 என்ற திரிபடைந்த கொரோனா வைரஸ் காரணமாக தெற்காசிய நாடுகள் பாரிய பேரழிவை சந்தித்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்