மன்னார் மாநகர சபை தலைவர் தனிப்பட்ட பகையால் மேற்கொண்ட செயற்பாடுக்கு நீதிமன்றின் உத்தரவு!
மன்னார் நகர பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விளம்பரப்பலகை ஒன்றை அகற்றுவதற்கு மன்னார் நகர சபை தலைவர் எடுத்த முயற்சிக்கு நீதிமனடறு தடை விதித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மன்னார் நகர பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு செந்தமான இடத்தில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் விளம்பர பலகை உரிய அனுமதிகளை பெற்று வைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் மன்னார் நகர சபை தலைவர் தனிப்பட்ட பகை காரணமாக விளம்பர பலகையை அகற்ற முயற்சி மேற்கொண்ட நிலையில் குறித்த செயற்பாட்டுக்கு மன்னார் மேல் நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னார் நகரசபை தலைவரின் வதிவிடத்திற்கு அருகில் உள்ள குறித்த தனியார் விருந்தினர் விடுதி உரிமையாளருக்கும் நகர சபை தலைவர் அன்ரனி டேவிட்சனுக்கும் இடையில் காணப்பட்ட தனிப்பட்ட பிரச்சினை ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக மன்னார் நகர சபை தவிசாளர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து குறித்த விளம்பர பலகையை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் தனியார் விருந்தினர் விடுதியின் உரிமையாளரால் குறித்த செயற்பாட்டுக்கு எதிராக மன்னார் மேல் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கை விசாரித்த மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி விளம்பர பலகையை தொடர்சியாக கட்சிப்படுத்த அனுமதி வழங்கியுள்ளார். தனிப்பட்ட பகை காரணமாக அதிகார துஸ்பிரயோக செயற்பாட்டில் ஈடுபட்டு நீதிமன்றம் சென்ற நகரசபை தவிசாளரின் செயற்பாடு மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.